| ADDED : மே 29, 2024 05:35 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பாக தருமபுரி ஜெயம் பொறியியல் கல்லுாரியில் நடந்த மாநில இன்டர் டிஸ்டிரிக் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷீப் 2024 போட்டியில் பங்கேற்ற சாதனை வீரர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.17 வயது பிரிவு மாணவிகள் அணியில் பங்கேற்ற யோகாஸ்ரீ, ரிச்சிதா தேவி, அக்சயாஸ்ரீ, மோனிஸ்ரீ 2ம் இடம், 15 வயது பிரிவில் பங்கேற்ற யோகாஸ்ரீ, ரிச்சிதாதேவி, தன்மயா, தனன்யா 2ம் இடம், 13வயது பிரிவில் பங்கேற்ற அக்சரா, ஆத்மிகா, ஜெசிந்தா, ஹென்சி சகாய் 3ம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர். தனிநபர் 17 வயது மாணவியர் பிரிவில் யோகாஸ்ரீ முதலிடம், 15வயது பிரிவு காலிறுதி வரை சென்ற ரிச்சிதாதேவி, மாணவர் தனிநபர் போட்டியில் 17 வயது பிரிவில் ஸ்ரீநாத் காலிறுதியிலும், 13 வயது பிரிவில் ஹேமேந்திரன் காலிறுதி வரை சென்ற நிலையிலும், 11 வயது பிரிவில் தீபக் முருகன் 3ம் இடம் பிடித்தனர். சாதித்த மாணவர்கள், பயிற்சியாளர் ஜேம்ஸ்க்கு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் செயலாளர் வித்யாசாகர் தலைமை வகித்தார்.