மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
3 minutes ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
3 minutes ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
5 minutes ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே சிலுவத்துார் புதுார் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சாணார்பட்டி அருகே சிலுவத்துார் ஊராட்சி பதுார் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் கோபூஜையுடன் துவங்கியது. நேற்று 4 கால யாக வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கருடன் வட்டமிட பக்தர்கள் வணங்கினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பருமரத்துப்பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம், 8 வீடு மங்கள மகரிஷி கோத்திரம் சார்ந்த மக்கடவர் குலப்பங்காளிகளின் குலதெய்வம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் அன்று மங்கள வாத்தியம் முழங்க மஹா சுதர்ஸன ஹோமம் நடந்தது. தொடர்ந்து புண்ணிய வாசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மண்டல கும்ப பூஜை நடந்தது. இரண்டாம் நாள் அன்று பகவத் அனுக்ஞை, சங்கல்பம், விஷ்வக்சேன ஆராதனம், காயத்ரி ஹோமம் நடந்தது. நேற்று நான்காம் காலம், கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் விமானம், ராஜகோபுரம் சகல பரிவார தேவதைகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் கலசங்களில் புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. நிவேதனம், வேத்திவ்ய பிரபந்த சாத்து முறை, பஞ்சதரிசனம், எஜமானர் மரியாதை, தீபாராதனை நடந்தது. அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
3 minutes ago
3 minutes ago
5 minutes ago