உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீதிபதி என ஏமாற்றியவர் பழநியில் கைது

நீதிபதி என ஏமாற்றியவர் பழநியில் கைது

பழநி, : பழநியில் நீதிபதி எனக்கூறி ஏமாற்றி சுவாமி தரிசனம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி பாரதியார்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு 57. பழநி கோயிலுக்கு தரிசனம் செய்ய வாடகை காரில் வந்தார். சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்ற பணியாளர்களை அழைத்தார். அப்போது அவரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களை கேட்கும்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். 'தர்மபுரி மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்ததாகவும் சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் 'கூறினார். சந்தேகமடைந்த பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். ரோப்கார் பகுதியில் அவரிடம் போலீசார் விசாரித்தனர். நீதிபதி எனக்கூறி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல கோயில்களில் ஏமாற்றி சிறப்பு தரிசனம் செய்தது தெரிந்தது. அடிவாரம் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை