உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டல் அசோசியேஷனிடம் நுண் உர மையம்; மாநகராட்சி முடிவு

ஓட்டல் அசோசியேஷனிடம் நுண் உர மையம்; மாநகராட்சி முடிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் செயல்படும் குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும் நுண் உர செயலாக்க மையத்தை ஓட்டல் அசோசியேஷனுக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளிலும் தினமும் காலை,மாலை இரு நேரங்களிலும் துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரிக்கின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பை திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் செயல்படும் 10 நுண் உர செயலாக்க மையங்களில் உரமாக்குகின்றனர். இது இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. நுண் உர செயலாக்க மையத்திற்கு வரும் குப்பையில் பெரும்பாலானவை ஓட்டல் கழிவுகள் தான். புதிய முயற்சியாக திண்டுக்கல் நகரில் 100 கிலோவுக்கு மேல் தினமும் குப்பை கழிவுகளை வெளியிடும் ஓட்டல்களை தேர்வு செய்து அங்கிருந்து பெறப்படும் கழிவுகளை அவர்களே வண்டியில் ஆள் வைத்து ஏற்றி மக்கும் மக்காத குப்பையாக தரம்பிரித்து உரமாக தயாரித்து இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தை ஓட்டல் அசோசியேஷனுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டல் அசோசியேஷன் நிர்வாகிகளை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அழைத்து ஆலோசனை நடத்தினார். மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா,மாநகர நல அலுவலர் முத்துக்குமார்,சுகாதார ஆய்வாளர் ஸ்டீபன் இளங்கோ ராஜ் பங்கேற்றனர். ஓட்டல் அசோசியேஷன் நிர்வாகிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இன்னும் சில தினங்களில் நுண் உர செயலாக்க மையத்தை ஒப்படைக்கும் பணிகள் நடக்க உள்ளதாகவும்,அதன் முழு செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்வார்கள் எனுவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை