உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் புதிதாக 16 வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரத்தில் புதிதாக 16 வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: ''ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் புதியதாக 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக,'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.சிக்கமநாயக்கன்பட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி ஊராட்சிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை திறந்து வைத்தும், கலைஞரின் கனவு இல்ல பயனாளிகள் 238 நபர்களுக்கு கடன் அனுமதி ஆணைகளை வழங்கிய அவர் பேசியதாவது:சண்முகநதி , அமராவதி ஆறுகளில் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை ஒட்டன்சத்திரம், ஆத்துார், வேடசந்துார், கரூர் மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் புதியதாக 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.ஆர்.டி.ஓ., கண்ணன், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தாசில்தார் பழனிச்சாமி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி, தி.மு.க, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ