| ADDED : ஆக 23, 2024 05:09 AM
நத்தம்: நத்தம் அருகே காசம்பட்டி கற்பக விநாயகர், முத்தாலம்மன் கோயில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவையொட்டி ஆக.19 முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூலமந்திர ஹோமம் , முதல் காலயாக பூஜைகள் நடந்தது. நேற்று யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவிரி,கரந்தமலை அழகர்மலை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டட தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புனித தீர்த்தம், பூஜை மலர்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.