உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் 6 மையங்களில் நீட் தேர்வு: 128 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்லில் 6 மையங்களில் நீட் தேர்வு: 128 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்த நீட் தேர்வை 3276 பேர் எழுதினர். 128 பேர் வராமல் ஆப்சென்ட் ஆகினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில் 1249 ஆண்கள், 2155 பெண்கள் என மொத்தம் 3404 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் 3 மையங்கள், திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா, பழநி ரோடு பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி, அனுகிரகா பள்ளி என மொத்தம் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது. காலை 11:00 மணி முதலே தேர்வர்கள் தங்களின் பெற்றோரோடு தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். நுழைவுச் சீட்டு, புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வளையல், கம்மல் அணிந்து வந்த மாணவிகள், அதனை அகற்றிவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். விண்ணப்பித்திருந்த 3404 பேரில், 1217 ஆண்கள், 2059 பெண்கள் என மொத்தம் 3276 பேர் தேர்வு எழுதினர். 32 ஆண்கள், 96 பெண்கள் என 128 பேர் தேர்வில் பங்கேற்வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி