| ADDED : ஜூன் 07, 2024 06:54 AM
திண்டுக்கல்: வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனைகள் நடந்தன.திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் உள்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடும் நடந்தது. குறிப்பாக கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி லிங்குசாமி மடத்தில் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது. செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஒட்டன்சத்திரம் : விருப்பாச்சி தலையூற்று அருவிக்கு அருகில் உள்ள ஸ்ரீ நாக விசாலாட்சி அம்பிகா சமேத விருப்பாட்சேஸ்வரர் கோயிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கும் சிவ லிங்கத்திற்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் ,தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.