செய்தி சில வரிகளில்... போதை விழிப்புணர்வு ஊர்வலம்
பழநி : தும்பலப்பட்டியில் செயல்பட்டு வரும் சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி சார்பில் பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியிலிருந்து போதை விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன் துவங்கிவைத்தார். அறக்கட்டளை செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ, ஆசிரியர் தென்னரசு கலந்து கொண்டனர். ...............தி.மு.க., பொதுக்கூட்டம் எரியோடு : எரியோட்டில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிகரசுதன், துணை அமைப்பாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கவிதா, சாமிநாதன், சீனிவாசன், சுப்பையன், பாண்டி, ராஜலிங்கம், நகர செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், கணேசன், கருப்பன், கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பண்ணை கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி பங்கேற்றனர்................மனித சங்கிலி போராட்டம்திண்டுக்கல்:மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த இதற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். செயலர் சுகந்தி ப,மாநில செயலர் ஜெசி பேசினார். பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.............உதவிகள் வழங்கல் வடமதுரை : மகளிர் தினத்தை யொட்டி வடமதுரை ஒன்றிய ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு வேடசந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ, பி.டி.ஓ., சுப்பிரமணி பங்கேற்றனர்..............................கல்லுாரி ஆண்டு விழாகொடைக்கானல் :அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்து மாணவிகளுக்கு கணினி வழங்கினார்.கல்லுாரி முதல்வர் எனோலா அருட்செல்வி பர்வதா ,கவுரவ விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.