உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணியை சமூக நலத்துறை,வருவாய்த்துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணி ,தடுப்பூசிப்பணி,குடும்ப நலப்பணிகள் நடக்க உரிய உத்தரவு வழங்க வேண்டும். கணினி பணியை மேற்கொள்ள ஆப்பரேட்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ருக்மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயசித்ரா,செயலாளர் ராஜேஸ்வரி,பொருளாளர் ராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர்கள் சத்யா,அன்புச்செல்வி,துணை செயலாளர்கள் மகேஷ்வரி,முனிஸ்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ