உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மையான நகரமாகும் ஒட்டன்சத்திரம்

துாய்மையான நகரமாகும் ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம்: ''ஒட்டன்சத்திரம் துாய்மையான நகராட்சி'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரத்தில் நகர தி.மு.க., சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 12 நகராட்சிகள் துாய்மையான நகராட்சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஒன்று. ரூ. 1000 கோடி மதிப்பீட்டிலான காவிரி குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சனை இருக்காது,என்றார். நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பரணி மணி, மாவட்ட அவைத் தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகரப் பொருளாளர் அப்பாசாமி பங்கேற்றனர்.மார்ச் 1 ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தி.மு.க., அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச் செல்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை