பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா துவங்கியது
பழநி, : பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் மாசி திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது.மார்ச் 13 வரை நடக்கும் இவ்விழாவில் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல், பிப்.,25 ல் திருக்கம்பம் சாட்டுதல், இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயிலில் சாற்றுதல் நடைபெறுகிறது.மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் ,மார்ச் 11 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், மார்ச் 12 மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது. மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.