உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பைப்லைன் உடைப்பு சீர் செய்யப்பட்டது

பைப்லைன் உடைப்பு சீர் செய்யப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாலைப்பட்டி ரோடு பாலகிருஷ்ணாபுரம் பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைனில் ஏற்பட்ட உடைசலால் குடிநீர் வீணாவதை தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதால் உடனடியாக சரிசெய்யப்பட்டது.திண்டுக்கல் மாலைப்பட்டி ரோடு பாலகிருஷ்ணாபுரம் பிரிவு ரோட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைனில் உடைசல் ஏற்பட்டது. இதையொட்டி குடிநீர் ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நிலத்தடி பைப்லைன் நீர்கசிவை சரிசெய்தனர். இதன் பின் வழக்கம் போல் பயனாளிகளுக்கு குடிநீர் சப்ளை தடையின்றி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி