உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏற்கனவே அனுப்பிய சிட்கோ மனு செய்தியுடன் இதை பாக்ஸ் கட்டி சேர்க்கவும்... சிட்கோ வேண்டாம் :பெண்கள் நுாதனபோராட்டம்

ஏற்கனவே அனுப்பிய சிட்கோ மனு செய்தியுடன் இதை பாக்ஸ் கட்டி சேர்க்கவும்... சிட்கோ வேண்டாம் :பெண்கள் நுாதனபோராட்டம்

ஒட்டன்சத்திரம்: கொத்தயத்தில் சிட்கோ கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் தலையில் முக்காடிட்டு ஒப்பாரி வைத்தப்படி நுாதன போராட்டம் நடத்தினர்.கொத்தயம் ஊராட்சி வெடிக்காரன் வலசு கிராமத்தில் அரளிகுத்து குளத்தில் சிட்கோ அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் சிட்கோ அமைத்தால் நிலத்தடி நீர்மட்டத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என கூறி பெண்கள் தரையில் அமர்ந்து முக்காடிட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் குளத்தை பார்வையிட்டார். மாவட்ட பொதுச் செயலாளர் ராமசாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நாச்சிமுத்து , ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சுந்தர்ராஜ், செல்வராஜ் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி