உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு

வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு

ஒட்டன்சத்திரம், பத்து ஆண்டுகளாக மோடி அரசு இளைஞர்களுக்கு எந்த வித வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை, என மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.ஒட்டன்சத்திரத்தில் நடந்த இண்டியா கூட்டணி மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்ததை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது : இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு இதற்கு எதிராக பா.ஜ., ஒரு யுத்தத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது. பா.ஜ., அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடியாத அளவிற்கு இரு மாநில முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளது.10 ஆண்டுகளாக மோடி அரசு இளைஞர்களுக்கு எவ்வித வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 83 சதவீதம் இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சிறு குறு தொழிலுக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை. பிரதமர் மோடி தனது பிரசார கூட்டங்களில் இண்டியா கூட்டணி ஊழல் கட்சிகளின் கூட்டணி என்கிறார். ஊழலைப் பற்றி யார் பேசுவது. மோடி அரசுதான் ஊழல் உடைய மொத்த உருவமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பா.ஜ., ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை,என்றார்.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், காங்., மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சிவமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

g.s,rajan
ஏப் 08, 2024 21:21

வேலை இல்லாமல் பலர் நம் நாட்டில் சும்மாவே இருக்காங்க


rsudarsan lic
ஏப் 08, 2024 17:30

புள்ளி விவரங்களை அள்ளி வீசுவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை கொரோனா பற்றி இவருக்கு எதாவது தெரியுமா?


GoK
ஏப் 08, 2024 12:24

உலகமெங்கும் ஒழிக்கப்பட்ட ஒரு வன்முறை சார்ந்த அரசியல் இயக்கம் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் இது இந்தியாவில் இப்போது ஒரு மாநிலத்தில் மட்டும் மதவாத அரசியலால் தொங்குகிறது ஒரு தனிமனித சுதந்திரத்தை முழுவதும் புறக்கணித்து சர்வாதிகார ஆட்சியை நம்பும் இந்த சித்தாந்தம் ஜனநாயகத்தை காக்கப்போகிறாதாம்


VENKATASUBRAMANIAN
ஏப் 08, 2024 07:50

கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் ரொம்ப நாளாயிற்று


புதிய வீடியோ