உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநகராட்சி அலுவலகத்தில் குப்பையை கொட்டி போராட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் குப்பையை கொட்டி போராட்டம்

திண்டுக்கல், : கோடை காலத்தில் 1 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் குப்பையை கொட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாநகராட்சி யில் பணியாற்றும்துாய்மை பணியாளர் களுக்கு கோடை காலத்தில் 1 மணி நேரம் பணி வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் தரம்பிரிக்கும் பணியை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் குப்பையை கொட்டி துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் துாய்மை பணியாளர்கள் கமிஷனர் அறை முன் அமர்ந்தனர்.இதன்பின் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரி கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்படாத துாய்மை பணியாளர்கள் ,அத்துமீறும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷ மிட்டனர். இதையடுத்து, கோடை காலத்தில் 1 மணி நேரம் பணி வழங்கவும், குப்பை தரம்பிரிக்கும் பணி துவங்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் உறுதியளித்தார். இதைதொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ