| ADDED : ஜூலை 19, 2024 05:37 AM
திண்டுக்கல் : ''காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா காங்., அரசுக்கு எதிராக போராட தயாராக உள்ளோம்,'' என, திண்டுக்கல்லில் தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.திண்டுக்கல் ஒருங்கிணைந்த காங்.,நிர்வாகிகள் நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செல்வபெருந்தகை திண்டுக்கல் நத்தம்ரோடு,நாகல்நகர்,தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றினார். தொடர்ந்து மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்த அவருக்கு ராட்சத பூ மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவாஜி, மாவட்ட துணைத்தலைவர் காஜாமைதீன், மாவட்ட இளைஞர் காங்., தலைவர் முகமது அலியார் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து காங்., தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை கர்நாடகா அரசு கொடுக்க வேண்டும். கர்நாடகா அரசுக்கு எதிராக போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பா.ஜ., தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என்றார்.