உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் அகற்றாத மரத்தால் விபத்து அபாயம்

மலைப்பகுதியில் அகற்றாத மரத்தால் விபத்து அபாயம்

தாண்டிக்குடி, : தாண்டிக்குடி-பண்ணைக்காடு ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இரு வாரங்களாக மலைப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. சூறைக்காற்று வீசிய நிலையில் கடுகுதடி ரோட்டில் மூன்று இடங்களில் மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலைத்துறை மரங்களை அரைகுறை நிலையில் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். ரோட்டோரம் முழுமையாக அகற்றாத மரத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இது போன்ற மெத்தனப்போக்கை தொடர்ந்து வருகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' தாண்டிக்குடி-கடுகுதடி ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்கள் சில தினங்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்