உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.2 கோடி மோசடி: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

ரூ.2 கோடி மோசடி: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல்: கன்னிவாடி பகுதியை சேர்ந்த 30க்கு மேலானோர் திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில்,கன்னிவாடி பண்ணைப்பட்டி சேர்ந்த ஒருவர் கன்னிவாடியில் உரம்,பூச்சி மருந்து கடை நடத்தினார். இவர், மனைவி ஆகியோர் சேர்ந்து ஏல சீட்டு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தினர். இவரது கடைக்கு உரம் வாங்க வரக்கூடிய விவசாயிகள்,பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி 50க்கு மேற்பட்டோரை சேர்த்தனர். 6 மாதமாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணம் தராமல் காலதாமதம் செய்தனர். இதனிடையே கடை, வீட்டை பூட்டி விட்டு ரவிச்சந்திரன் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரது அலைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. ஏல சீட்டில் பணம் கட்டி ஏமாந்த விவசாயிகள்,பொதுமக்கள் 35 பேர் ரூ.2 கோடிக்கும் மேல் பணத்தை இழந்துள்ளோம். மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை