உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுகாதாரமில்லாத மீன்கள் விற்பனை; அபராதம்

சுகாதாரமில்லாத மீன்கள் விற்பனை; அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைகால் மீன்மார்க்கெட்டில் சுகாதாரமில்லாமல் மீன் விற்றதாக 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 52 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் சோலைகால் மீன் மார்க்கெட்டில் புதன்,ஞாயிற்றுக்கிழமைகளில் நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து மக்கள் குவிகின்றனர். இங்குள்ள கடைகளில் சுகாதாரமில்லாமல் மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சுகாதாரமில்லாமல் மீன்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 52 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை