உள்ளூர் செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி

நத்தம் : -நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயக பெருமானுக்கு அருகம்புல், ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. அருகிலுள்ள முருகபெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில், கே.அய்யாபட்டி மாணிக்க விநாயகர், நத்தம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை