உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாவது மோடி ஆட்சியில்; மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேச்சு

பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாவது மோடி ஆட்சியில்; மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேச்சு

ஒட்டன்சத்திரம் : ''பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அமைச்சர்களாக உள்ளது பிரதமர் மோடி ஆட்சியில் தான்.''என,பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசினார்.ஒட்டன்சத்திரத்தில் நடந்த பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: 40 தொகுதிகளில் தி.மு.க., வை வெற்றி பெற செய்ததற்கு கொடுத்த பரிசு உடனடியாக மின்கட்டணத்தை உயர்த்தியதுதான். 3 ஆண்டுகளில் 3 முறை மின்சார கட்டணத்தை உயர்த்தி 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கக்கூடிய இடங்களில் பா.ஜ., வுக்கு மிகப்பெரிய ஓட்டுகள் கிடைத்துள்ளது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அமைச்சர்களாக உள்ளது மோடி ஆட்சியில் தான். ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே முத்ரா கடன் அதிகமாக வாங்கியது தமிழ்நாடு தான் என்றார்.மாவட்ட பொதுச் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, ஒன்றிய தலைவர்கள் ரகுபதி, ருத்திர மூர்த்தி, சிவராமன், நாச்சிமுத்து முன்னிலை வகித்தனர். தேசிய பொது குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட தலைவர் கனகராஜ் பேசினர். மாவட்ட விவசாய அணி தலைவர் நாட்டுத்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் லீலாவதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் பிரிவு தலைவர் வெங்கடேஷ், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் மகுடீஸ்வரன், ஆன்மிகப் பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் உலகநாதன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சதீஷ்குமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சூர்யா பங்கேற்றனர். நகரத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை