உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியருக்கு சம்பளம் வழங்காத பள்ளி நிர்வாகம்: லிஸ்ட் அனுப்பும்போது மறந்து விட்டதாக விளக்கம்

ஆசிரியருக்கு சம்பளம் வழங்காத பள்ளி நிர்வாகம்: லிஸ்ட் அனுப்பும்போது மறந்து விட்டதாக விளக்கம்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் ஜோசப் பால் 57. இவருக்கு மே மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை. சம்பளப்பட்டிகளை தயார் செய்து அனுப்பும் டெக்னிக்கல் கிளார்க் இடம் கேட்டபோது பெயரை பட்டியலில் இணைப்பதற்கு மறந்து விட்டதாக பதில் கூறி உள்ளார். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில் இடைநிலை ஆசிரியர் ஜோசப் பெயர் மட்டும் விடுபட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆசிரியர் ஜோசப் பால் கூறியதாவது: எனது பெயரை சம்பளப்பட்டியலில் முறையாக சேர்க்காமல் விடுபட்டுள்ளது ஏதோ உள் நோக்கம் உள்ளது. இதற்கு முழு காரணம் தலைமையாசிரியர் தான். அவர் மே 31ல் ஓய்வு பெற்ற நிலையில் உள்நோக்கம் காரணமாக எனது பெயரை மட்டும் சேர்க்காமல் பட்டியலை அனுப்பி உள்ளார். மாவட்ட அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளேன். இதே போல் வருங்கால வைப்பு நிதியில் பகுதி இறுதித் தொகை பெற்று வழங்க விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை லதா ராணி கூறியதாவது: சம்பளப் பட்டியலை தயார் செய்து அனுப்பும் இடத்தில் சிறு தவறு நடந்துள்ளது. பொறுப்பு தலைமை ஆசிரியர் வந்தவுடன் அந்த ஆசிரியருக்கான சம்பள பாக்கி வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ