உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி

திண்டுக்கல் : லக்ஸர் வேர்ல்டு பள்ளியில் டெக் டாட்வா 2024 எனும் தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது அறிவியல் பாடத்திட்டங்கள் சம்பந்தமான செயல்முறை திட்டங்களை ப்ராஜெக்டுகளாக கண்காட்சியில் வைத்தனர். பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன், முதல்வர் ஹெலன் பொன்ராஜ் பங்றேற்றனர். சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் வான்காணகத்திற்கான பொது வெளிப் பொறுப்பாளர் பங்கேற்று இயற்கை அறிவியல் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு உரையற்றியதோடு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை