உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஆட்டோவில் தென்னங்கீற்று கூரை

வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஆட்டோவில் தென்னங்கீற்று கூரை

திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்திலிருந்து பயணிகளை காக்க ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னங்கீற்றில் கூரை அமைத்து அடிக்கடி தண்ணீரில் நனைத்தப்படி ஆட்டோ டிரைவர் ஒருவர் சவாரியில் ஈடுபட்டுள்ளார்.திண்டுக்கல்லில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதிலிருந்து மீள்வதற்காக மக்கள் பழச்சாறு,குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிடுகின்றனர். இது மட்டுமன்றி நகரின் முக்கிய பகுதிகளில் நகராட்சி,அரசியல் கட்சிகள் சார்பில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மக்களும் முக்கிய காரணங்களுக்காக மட்டும் தான் வெளியில் வருகின்றனர். குளிர்சாதன வசதி இல்லாத பஸ்,ஆட்டோக்களில் பயணிப்போர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை தடுக்கும் வகையில் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்காதர் ,தனது ஆட்டோவில் குளிர்ச்சி தரும் தென்னங்கீற்றுகளை ஆட்டோவின் மேல் பகுதியில் கட்டி வைத்து அடிக்கடி தண்ணீரை ஊற்றி குளிர்ச்சி படுத்துகிறார். வெயில் நேரத்தில் இவர் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் வெயிலின் தாக்கம் தெரியாமல் பயணிக்கின்றனர்.'' கிராமங்களில் தென்னங்கீற்றுகளை வைத்து கட்டப்படும் வீடுகளில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால் தான் ஆட்டோவிலும் அதை பின்பற்றினேன் ''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை