வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தூர்வார காசு இல்லையா அரசு அதிகாரிகளே , துரை கிட்ட சொல்லுங்க , இல்லை
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளை துார்வாரி பருவ மழை காலத்தில் கூடுதல் நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கொடைக்கானல் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இதன் மூலம் அமராவதி, பாலாறு, பொருந்தலாறு, சோத்துப்பாறை, பரப்பலாறு, வரதமா நதி, குதிரையாறு, மஞ்சளாறு, மருதாநதி, ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம், நாயோடை, குடகுனாறு, நாங்கஞ்சியாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. இதுவரை துார்வாரப்படாத நிலையில் அணைகள் சேறு, சகதிகளாக நிறைந்து நீர் சேமிப்பு திறனும் குறைந்துள்ளது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரம் பெய்யும் மழையின் போது அணைகள் நிரம்பி வழிவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுகிறது. அணைகளிலிருந்து நீர் பாசன வசதி பெறும் பகுதிகளுக்கு உரிய முறையில் போதுமான தண்ணீர் செல்லாது விவசாயம் பாதிக்கிறது. அவ்வப்போது துார்வாரப்படும் என அரசு அறிக்கையை மட்டும் வெளியிடுகிறதே தவிர நடவடிக்கை இல்லாது அணைகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.கோடைகாலத்தில் ஏற்படும் நீர் தட்டுப்பாட்டின் போதே அணைகளில் உள்ள மண்ணை அகற்றி நீரின் சேமிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் ,விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இருந்தபோதும் இவற்றிற்கு செவி சாய்க்காத நிலையில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இந்நிலையை மாற்ற மாவட்டத்தில் உள்ள அணைகளில் துார்வாரும் பணியை முடிக்கி விட வேண்டும்.
தூர்வார காசு இல்லையா அரசு அதிகாரிகளே , துரை கிட்ட சொல்லுங்க , இல்லை