உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தால் முன்னேறலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரை

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தால் முன்னேறலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரை

ஆத்துார் : ''ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆத்துார் கூட்டுறவு கலைக்கல்லுாரியில் நடந்த வகுப்புகள் துவக்க விழாவில் அவர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி அறிவிக்காத பல நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தரத்தை மேம்படுத்துவதுடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொருளாதார தடையை தவிர்க்க புதுமைப்பெண் போன்று மாணவர்களும் பயன்பெற தமிழ் புதல்வன் திட்டம் இந்தாண்டு முதல் துவங்குகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு கல்லுாரிகூட கொண்டு வரவில்லை. நத்தத்தில் அரசு கலைக்கல்லுாரி துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கண்டிக்கும்போது மாணவர்கள் மனப்பூர்வமாக ஏற்று மதிப்பளித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். வாழ்க்கையின் திசையை காட்டுவது கல்வி என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சக்திவேல், கல்லுாரி முதல்வர் சுபாஷினி, ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். கல்லுாரி நிர்வாக அலுவலர் மதி, துணை முதல்வர் பழனிக்குமார், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் கணேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை