மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
06-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. பள்ளி செயலாளர்கள் மங்களராம்,காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். 11ம் வகுப்பு மாணவி அபிரா வரவேற்றார். பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பேராசிரியர்கள் டாக்டர் பாஸ்கரன்,டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினர். அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசுகள்,இனிப்புகள் வழங்கப்பட்டது. 11ம் வகுப்பு மாணவர் நவின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை. பிரபா,பத்மநாபன். ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி,விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்,மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் செய்தனர்.திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். டான் பாஸ்கோ இயக்குனர் ஜெரார்டு பிரிட்டோ பங்கேற்றார். நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ், பாதிரியார் ஆண்டனி, ஜான் லுாக்காஸ், பள்ளி முதல்வர் ரோஸ்லின் ,துணை முதல்வர் ஞானசீலா பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு பேசினார் .அனைத்து ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தனராஜன் தலைமை வகித்தார். சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தங்கசுமதி,முதுகலை பட்டதாரி ஆசிரியர் தங்கவேல் ஆகியோருக்கு முன்னாள் மாணவர் பிரதாப் சிங் நினைவு பரிசு வழங்கினார்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. வட்டார வள மைய ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.திண்டுக்கல் ஸ்ரீ காமராஜர் மெட்ரிக்., பள்ளியில் பள்ளி செயலர் ராமலிங்கம், பொறுப்பு முதல்வர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் அகிலன் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரங்கசாமி ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி, விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.* ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளியில் டாக்டர் நர்த்தனன் மதி செல்வன் பேசினார். நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் சவும்யா வாழ்த்து தெரிவித்தார்.வடமதுரை: கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள் தலைமை வகித்தார். இயக்குனர்கள் அருள்மணி, சுப்பம்மாள், ஹரிசெந்தில் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ராமு வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, கலைமகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
06-Sep-2024