உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், பால் கடை, வடகவுஞ்சி, சவுரிக்காடு,பாச்சலுார் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு விளைச்சல் குறைவாக இருந்ததால் மார்க்கெட்டில் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40க்கு விற்றது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் அறுவடை மும்முரம் அடைந்துள்ள நிலையில் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக அதிகரித்தது. கேரளாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக அம்மாநில வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைத்தனர். இந்த காரணங்களால் பீன்ஸ் விலை மிகவும் சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை