உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் இருவரை பிடித்து சென்ற போலீஸ் கிராமத்தினர் மறியல்

வழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் இருவரை பிடித்து சென்ற போலீஸ் கிராமத்தினர் மறியல்

வடமதுரை: வடமதுரை அருகே வழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் இருவரை போலீசார் பிடித்து சென்ற நிலையில், இதை கண்டித்து அய்யலுார் எரியோடு ரோட்டில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சித்துவார்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகுமார் 35.இவர் மே 19ல் அய்யலுாரில் இருந்து எரியோடு ரோட்டில் காரில் சென்றபோது இரு இடங்களில் நடந்த விபத்தில் எஸ்.கே.நகரை சேர்ந்த பாலகுரு 45,சித்துவார்பட்டி முருகன் 48, என இருவர் காயமடைந்தனர். சிறிதுாரம் சென்ற கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கறிஞருடன் தகராறில் ஈடுப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்கறிஞர் விஜயகுமார் மீது இரு வழக்கு , வழக்கறிஞரை மிரட்டியதாக ஒரு வழக்கும் பதிவானது. வழக்கறிஞரை மிரட்டியவர்களை கைது செய்யக் கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.இதை தொடர்ந்து வழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் பாலக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ் 23, கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் இருவரை வடமதுரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதிருப்தியான எஸ்.கே.நகர் மக்கள், ஒருதலைபட்சமாக போலீசார் நடந்து கொள்வதாக கூறி நேற்று மாலை அய்யலுார் எரியோடு ரோட்டில் மறியலில் ஈடுப்பட்டனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதி கூட்டம் மூலம் தீர்வு காணப்படும் என கூற 3 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்