உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதுவும் நமது கடமை தானே: 100 சதவீதம் ஓட்டுப்பதிவை சாத்தியமாக்கலாமே: நல்லவர்களை தேர்ந்தெடுக்க நல்லதொரு வாய்ப்பு

இதுவும் நமது கடமை தானே: 100 சதவீதம் ஓட்டுப்பதிவை சாத்தியமாக்கலாமே: நல்லவர்களை தேர்ந்தெடுக்க நல்லதொரு வாய்ப்பு

நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. நாட்டின் வலிமையை வெளிநாட்டவருக்கு எடுத்துரைக்கவும், நல்லதொரு பிரதமரை தேர்ந்தெடுக்கவும் வாக்காளர்களாகிய பொதுமக்கள் 100 சதவீத ஓட்டுப்பதிவை செயல்படுத்தி காட்ட வேண்டும். மாலை 6:00 மணிக்குள் ஓட்டு சாவடிக்குள் இருந்தால் டோக்கன் பெற்று 7:00 மணி வரை ஓட்டு அளிக்கலாம்.ஐந்து ஆண்டு நல்ல ஆட்சியை கொடுக்கக்கூடிய வலிமையான அரசை தேர்ந்தெடுப்பதற்கு பொதுமக்களாகிய நமக்கு இன்று மிக முக்கியமான நாளாகும். காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று 100 சதவீத ஓட்டுப்பதிவை சாத்தியமாக்க வேண்டும்.கடுமையாக வெயில் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் மதியம் 12:00 மணிக்கு உள்ளாகவே 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ஓட்டுகளை பதிவு செய்தால் இறுதிக்கட்ட நெருக்கடியை தவிர்க்கலாம்.18 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் முழு வீச்சுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க 18 வயதிற்கு மேற்பட்டோர் இன்று கட்டாயம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ