உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி

மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், -சாணார்பட்டி அருகே காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 20, கூலித்தொழிலாளி. இவருடன், நண்பர்களான அய்யலுாரைச் சேர்ந்த சசிக்குமார், 19, அதே பகுதி பிரதீப், 18, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல், செங்குறிச்சி ரோட்டில் சென்றனர்.சசிக்குமார் டூ - வீலரை ஓட்டினார். வங்கமானுாத்து வந்தபோது நிலை தடுமாறிய டூ - வீலர், சாலையோர தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி, சசிக்குமார் இறந்தனர். காயமடைந்த பிரதீப்,திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை