உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை

காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை

வடமதுரை: குடிநீர் பிரச்னைக்காக வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஜி.குரும்பபட்டி கிராமத்தினர் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாகியும் இத்தொட்டிக்கு காவிரி நீர் வருவதில்லை. உள்ளூர் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீர் எடுத்து வினியோகம் நடந்தது. இதுவும் பழுதானக 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை. அதிருப்தியில் இருந்த கிராமத்தினர் நேற்று காலி குடங்களுடன் வேனில் வடமதுரை பஸ் ஸ்டாப் வந்து, அங்கிருந்து ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திய வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையிலான போலீசார் குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூற கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 21, 2024 06:37

தேர்தல் நேரத்தில் ஆயிரம், ரெண்டாயிரம், குவாட்டர், கோழி பிரியாணி, தோடு, மூக்குத்தி, கொலுசு, அண்டா, குண்டா இவைகளை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடவேண்டியது அப்புறம் வெட்கமே இல்லாமல் போராட வேண்டியது.


முக்கிய வீடியோ