உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஜோர்

ஓட்டு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஜோர்

திண்டுக்கல் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தையும் ஓட்டு சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டது. வாகனம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் தலா ஒரு எஸ்.ஐ., காவலர் , தேர்தல் அலுவலர் என 3 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த வாகனங்கள் ஓட்டு பதிவு இயந்திரங்களை ஓட்டு சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை