உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த சுணக்கம் மெகா விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் விபரீதங்கள் நடக்கும் முன் தேவை நடவடிக்கை

ஏன் இந்த சுணக்கம் மெகா விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் விபரீதங்கள் நடக்கும் முன் தேவை நடவடிக்கை

மாவட்டத்தில் நான்கு வழி சாலை,நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என அனைத்து சாலையோ ரங்கள், தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரபேனர்களால் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து சூழல் உருவாகி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விளம்பரப்பலகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய விதிகளை தமிழக அரசு வெளி யிட்டது.இதை தொடர்ந்து சில இடங்களில் இருந்த மெகா விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.இருந்த போதும் பல இடங்களில் உள்ள மெகா விளம்பர பேனர்கள் அகற்றப்படாததால் அவை காற்றில் பறந்து வருகிறது. இது போன்று வைக்கப்படும் விளம்பரபேனர்களை முறையாக பராமரிப்பது இல்லை. அவை சேதமடைந்து கிழிந்து காற்றில் பறப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது போன்ற விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ