உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீதிமன்ற லிப்டில் சிக்கிய 10 பேர்; 20 நிமிடம் தவிப்பு  

நீதிமன்ற லிப்டில் சிக்கிய 10 பேர்; 20 நிமிடம் தவிப்பு  

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெண்கள் உட்பட 10 பேர் நேற்று லிப்டில் சிக்கியநிலையில் 20 நிமிடத்திற்கு பின் எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்தவர் கார்த்திக். இவர் வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது வடக்கு வாசல் பகுதியில் உள்ள லிப்டில் 2வது மாடிக்கு செல்ல பெண்கள் உட்பட 10 பேருடன் ஏறினர். லிப்ட் 1 வது மாடிக்கும் 2வது மாடிக்கும் இடையில் திடீரென சிக்கியது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.கார்த்திக் திண்டுக்கல் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கூறினார். இதனிடையே நீதிமன்ற ஊழியர்கள் லிப்டின் சுவிட்சை ஆப் செய்து மீண்டும் ஆன் செய்தனர். 20 நிமிடத்திற்கு பின் மீண்டும் லிப்ட் இயல்பு நிலைக்கு திரும்ப சிக்கியவர்கள் 2வது மாடியில் இறங்கினர். லிப்ட்டிலிருந்த எந்த பட்டன்களும் வேலை செய்யவில்லை என சிக்கியவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி