உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை13 பேருக்கு கொரோனா தொற்று

திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை13 பேருக்கு கொரோனா தொற்று

பழநி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வடமதுரை பகுதியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் கொடைக்கானல் பகுதியில் இருவர், வடமதுரை பகுதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் தேறிய நிலையில் குறிப்பிட்ட காலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டு தனிமையில் இருக்க டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஏற்கனவே நகராட்சி அதிகாரி, கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தநிலையில், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருநெல்வேலி:- திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி கிராமப் பகுதிகளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரியவந்தது. இவர்களில் வீட்டு தனிமையில் இருந்த 7 பேர் குணமாகினர். தற்போது இரண்டு பேருக்கு பாதிப்பு உள்ளது எனவும், அவர்கள் மட்டும் வீடுகளில் தனித்து இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இல்லை என டீன் ரேவதி பாலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி