மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
10-Dec-2024
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.பட்டிவீரன்பட்டி சித்தரேவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 40. இவரிடம் சின்னாளபட்டி முத்துமணிமாறன் 34, திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பலபட்டி பெத்தண்ணசாமி 25, ஆகியோர் அரசியல்வாதிகள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.2.60 லட்சம் பெற்றனர். வேலை வாங்கி தராததால் பாண்டியராஜன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது தகாத வார்த்தையில் பேசி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் பலரிடம் ரூ. 13 லட்சம் வரை இவர்கள் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
10-Dec-2024