31 டன் காய்கறி ஒரே நாளில் விற்பனை
பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, நேற்று காலை முதலே அதிக அளவில் மக்கள் குவிந்தனர். விவசாயிகள், 138 பேர் கடைகளில் காய்கறிகளை விற்றனர். தக்காளி, கத்தரி, அவரை, முருங்கை, மல்லி, புதினா, புடலை என அனைத்து வகை காய்கறிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.இந்த உழவர் சந்தையில் நாள்தோறும் சாதாரணமாக 15 முதல் 20 டன் காய்கறிகள் விற்பனையாகும். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 31 டன் காய்கறிகள் விற்பனை ஆகின.