| ADDED : மார் 17, 2024 01:18 AM
வடமதுரை: நான்கு ஆண்டு இடைவெளியில் மீண்டும் நின்று செல்லும் மயிலாடுதுறை, விழுப்புரம் ரயில்களுக்கு வடமதுரையில் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.கொரோனா முன் விழுப்புரம், மயிலாடுதுறை ரயில்கள் வடமதுரையில் நின்று சென்ற நிலையில் கொரோனா கால்ஙகளில் நிற்பதில்லை. கொரோனா முடிந்தும் இங்கு ரயில்கள் நிற்காமல் சென்றன. திருச்சி கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் சிரமப்பட்டனர். வடமதுரை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் ரயில்வே துறை உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து வடமதுரையில் மீண்டும் ரயில்களை நிறுத்த மனு அளித்து வந்தனர். இதன் பலனாக நேற்று முதல் திண்டுக்கல் - - விழுப்புரம் முன்பதிவில்லா ரயில் காலை 5:12 மணி , மறு மார்க்கத்தில் இரவு 9:20 மணி , செங்கோட்டை -- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11:42 மணி , மறு மார்க்கத்தில் மதியம் 3:27 மணிக்கு வடமதுரை ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 4 ஆண்டுகளுக்கு பின் நின்று சென்ற இந்த ரயில்களுக்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர். ரயில் டிரைவர்கள், கார்டு, ஊழியர்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.