உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மக்கள் குறை தீர் கூட்டத்தில் 462 பேர் முறையீடு

திண்டுக்கல் மக்கள் குறை தீர் கூட்டத்தில் 462 பேர் முறையீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 462 பேர் மனு வாயிலாக முறையிட்டனர். டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு அளித்த மனுவில் , வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் நான் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அனுப்புவதில்லை. காதில் பூ சுற்றும் வகையில் தான் பதில் வருகிறது என குறிப்பிட்டிருந்தார். பழநி ஆதி தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நெய்காரப்பட்டி சுற்றுப்பகுதியில் மண் திருட்டு நடக்கிறது. அவற்றை அதிகாரிகள் தடுப்பதில்லை. இதன் மீது ஆய்வு செய்து மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், கண்மாயில் வெட்டப்படும் மண் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி