உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  57 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல்

 57 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர், புறநகர், ஆத்துார், ரெட்டியார்சத்திரம், நத்தம், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள வணிக சில்லரை விற்பனை கடைகளில் குட்கா, பான் மசாலா சோதனையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வம், ஜாபர் சாதிக், முருகன், ஜோதிமணி, வசந்தன், ராமசாமி நடத்தினர். 32 கடைகளில் 57 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. 28 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம், உணவு பாதுகாப்பு அலுவலர்களின் எச்சரிக்கையை மீறி மீண்டும் விற்பனையில் ஈடுபட்ட 4 கடைக்காரர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.9 லட்சம் அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை