மேலும் செய்திகள்
பழநியில் மதிப்பீட்டு முகாம்
05-Oct-2024
பழநி:திண்டுக்கல்மாவட்டம் பழநி மலை அடிவாரம் மதனபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் டீக்கடைக்குள் புகுந்தது.பழநி மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 65. இவர் அதே பகுதியில் மளிகைக் கடையுடன் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையின் உள்பகுதியில் மளிகைப்பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் , கிருஷ்ணனின் டீக்கடைக்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரத்தில் கடையில் இருந்த பொருட்கள், டீ பாய்லர் உள்ளிட்டவை சேதமடைந்தது. பழநி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 24 ,என்பவர் மதனபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் காரை எடுத்து ஓட்டிவந்த போது கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது அடிவாரம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
05-Oct-2024