உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு

டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு

வடமதுரை, : வடமதுரை அருகே டூவீலரில் சென்ற தம்பதியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்த சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளி முருகன் 45. கட்டட தொழிலாளியான இவர் மனைவி ராஜலட்சுமி 40, உடன் நேற்று முன்தினம் இரவு வெளியூர் சென்றுவிட்டு டூவீலரில் ஊர் திரும்பினார். மா.மூ.கோவிலுார் பிரிவு பகுதி அலப்பாரி மேடு அருகே சென்றபோது, மற்றொரு டூவீலரில் பின் தொடர்ந்து வந்த இருவர் முருகனின் டூவீலரை வழிமறித்து நிறுத்தினர். கத்தியை காட்டி மிரட்டி ராஜலட்சுமி அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தாலி செயின் தங்கத்தோடு ஆகியவற்றை பறித்து தப்பினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை