| ADDED : பிப் 11, 2024 01:12 AM
சின்னாளபட்டி: அம்பாத்துறை அருகே அ.குரும்பபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். புரவலர் சவுந்தரராஜன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாரதி, கவுன்சிலர் முத்துமாரி சேகர், முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தங்காகண்மணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் பொற்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.சிறுவர் திரைப்படம் இயக்குதல் பிரிவில் வெற்றி பெற்று கல்வி சுற்றுலாவாக ஜப்பான் சென்று வந்த மாணவி கீர்த்தனா, மன்ற செயல்பாடு போட்டிகளில் ஒன்றிய அளவில் வென்ற நிதினா, தாரணி, சந்தோஷினி, ரூபிகா, ராகவன், தனுஷியா, ஹாசினி ஆகியோரை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. கல்வி செயல்பாடு சிறுசேமிப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கு நடந்த விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியர் ஜாக்குலின் லீமா தொகுத்து வழங்கினார்.ஆசிரியை ஜோஸ்பின்சீலி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேவி, சரஸ்வதி, பத்மாவதி, ரோசிலீமா செய்திருந்தனர்.