உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி

பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள நகராட்சி நிழற்குடைகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் நிலையால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நகர்ப்பகுதியில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் , பொதுமக்களின் தேவைக்கேற்ப நிழற்குடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முகம் சுளிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுவதோடு , குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் செயலும் அரங்கேறுகிறது . இங்கு விட்டுச்செல்லும் மது பாட்டில் குவியல், உணவு பொட்டலங்களை பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர். நிழற்குடைகளை பராமரிக்கப்படாமல் செடிகள் முளைத்தும், குப்பை சூழ்ந்தும் அசுத்தமாக உள்ளது. சுற்றுலா நகரில் இதுபோன்ற அவல நிலையை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி