சாதித்த பி.வி.பி.,பள்ளி
பழநி : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பழநி பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காவியா, சோபிகா, ஜெய வர்ணிகா, மாணவர் ஹரிஷ், சந்திரகாசன் , கவுதம், விஷ்ணு கண்ணன் தீக் ஷித், மயிலேஷ், தமிழினி, அபிநயா, ஷாலினி, கவுசிகா வெற்றி பெற்றனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற இவர்களை பள்ளி செயலர் குப்புசாமி ,முதல்வர் கதிரவன்,நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.