உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி

தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி

திண்டுக்கல்,:திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் இறந்த சம்பவத்தில் வி.ஏ.ஓ., ராமர் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினர் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் -- திருச்சி ரோட்டிலுள்ள சிட்டி மருத்துவமனையில் டிச., 12 இரவு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாயினர். 30 க்கும் மேற்பட்டோர் திணடுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீலப்பாடி வி.ஏ.ஓ., ராமர் கொடுத்த புகாரின்படி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து தற்செயலாக நடந்ததா, அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்தா என்ற அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.எஸ்.பி., பிரதீப் கூறுகையில்,''மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் புகார் பெறப்பட்டு முதற்கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினரின் அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை