மேலும் செய்திகள்
மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது
20-Oct-2024
வடமதுரை,: அய்யலுார் வேங்கனுார் களத்து வீட்டை சேர்ந்தவர் முத்துவேங்காயி 37. இவருக்கும் அதே பகுதி வியாபாரி ராமலிங்கம் 37, இடையே நிலப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் முத்து வேங்காயிக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்த வந்த உறவினர் மணிகண்டன், பவித்ரா ஆகியோரை ராமலிங்கம், அவரது மனைவி லோகேஸ்வரி அரிவாளுடன் வந்து தாக்கினர். ராமலிங்கம் அரிவாளுடன் அலப்பறை செய்த வீடியோ வைரலானது. இதையடுத்து ராமலிங்கத்தை வடமதுரை போலீசார் கைது செய்தனர். லோகேஸ்வரியை தேடுகின்றனர்.
20-Oct-2024