| ADDED : நவ 20, 2025 05:55 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு மலர் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், அடிவாரம் மலை குகை கோயில்களில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். குட்டூர்-அண்ணாமலையார் கோயில், நத்தம் மாரியம்மன் கோயில், அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோயில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.